ஐ.சி.சி 50 ஓவர் மற்றும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் மாற்றம் – ஐ.சி.சி அறிவிப்பு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை 14 அணிகளுக்கு விரிவுபடுத்துவதாகவும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை டி-20 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்றும் இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வாரியம் அறிவித்துள்ளது.
பொதுவாக ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியானது 10 அணிகளுக்கிடையே நடைபெறும்.அதைப்போன்று,டி 20 உலகக் கோப்பை போட்டியானது 16 அணிகளுக்கிடையே நடைபெறும்.
இந்நிலையில்,ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஆண்கள் டி 20 உலகக் கோப்பை விரிவாக்கப்பட வேண்டும் மற்றும் ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.சி.சி நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.பின்னர்,ஐ.சி.சி நிகழ்வுகளின் 2024-2031 ஆம் ஆண்டிற்கான அட்டவணையை ஐ.சி.சி வாரியம் இன்று உறுதிப்படுத்தியது.
அதன்படி,டி-20 உலக கோப்பை போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது என்றும், 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கையை 16 இல் இருந்து 20 ஆக உயர்த்துவது என்றும்,அதைப் போன்று 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 10 இல் இருந்து 14 ஆக உயர்த்துவதாகவும் ஐ.சி.சி வாரியம் அறிவித்துள்ளது.
மேலும்,2024 ஆம் ஆண்டில் இருந்து 2031 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்குள்,தரவரிசையின் அடிப்படியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.