உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, இந்தியா தகுதி பெறும் வாய்ப்பு.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், தகுதிபெற இந்தியாவிற்கு இருக்கும் வாய்ப்புகள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 தொடரின் இறுதிப்போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு அணியும், பெறும் புள்ளிகளின் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும்.
தற்போதுள்ள டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இது ஒவ்வொரு டெஸ்ட் தொடரும் முடியும்போது புள்ளிப்பட்டியல் மாறுபடும், இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அல்லது மிகபெரிய வெற்றி(4-0, 3-0) பெற்றால் இந்தியா இறுதிப்போட்டியில் பங்கேற்பது உறுதியாகிவிடும்.
ஒருவேளை இந்தியா 2-0 என்ற நிலையில் தொடரை வென்றால் கூட,இந்தியா வெளியேறும் அபாயம் ஏற்படும். இந்தியா தற்போது 58.93% புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.