சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசு தொகை அறிவிப்பு.! முதல் பரிசு எத்தனை கோடி தெரியுமா?

Champions Trophy 2025

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயின் கூட்டு ஏற்பாட்டின் கீழ் நடத்தப்பட உள்ளது. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதன் பின்னர், பிப்ரவரி 20 அன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற உள்ளது. பிப்ரவரி 23 அன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற உள்ளது.

இந்திய அணி மோதும் அனைத்து போட்டிகள் துபாயில் நடைபெறும். இது போக, இந்திய அணி இறுதி மற்றும் அரையிறுதிக்கு முன்னேறினாலும், அந்தப் போட்டிகளும் துபாயில் தான் நடைபெறும். இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நாளை துபாய் செல்ல உள்ளனர்.

இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை வரும் 20ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இதற்காக முன்னதாகவே துபாய் செல்லும் இந்திய அணியினர், அங்கு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்த மெகா போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

பரிசுத்தொகை விவரம்

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசு ரூ.20.8 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.9.72 கோடியும், அரையிறுதி சுற்றில் தோல்வியடையும் அணிக்கு தலா ரூ.4.86 கோடியும் பரிசுத்தொகை கிடைக்கும். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் மொத்தம் ரூ.60 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.

ஆம், 2025 சாம்பியன்ஸ் டிராபியில், இறுதி மற்றும் அரையிறுதிக்கு வரும் அணிகளுக்கு மட்டுமல்ல, 8 அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும். போட்டியில் 5வது மற்றும் 6வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும், 7வது மற்றும் 8வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.1 கோடியே 20 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், குரூப் கட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.29 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இந்த பரிசு தொகையானது 2017 -ல் நடைபெற்ற  சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒப்பிடும்போது மிக அதிகம். அதன்படி, இந்த ஆண்டு ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியின் பரிசுத் தொகையை 53 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்