சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சை : ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் போட்டிகளை எக்காரணம் கொண்டும் மாற்றமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சையை குறித்து ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அணி, தங்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், ஆலோசனைக் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் போட்டிகளை இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என தெரிவித்திருந்தது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்த சர்சையைக் குறித்து ஐசிசி ஒரு முடிவெடுக்க வேண்டுமென நேற்று இதற்கான ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது. காணொளி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தின் தொடக்கத்திலே இந்திய அணியின் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அவர்கள் எடுத்த முடிவில் எந்த வித மாற்றமும் செய்யாமல் இருந்தனர். அதே நேரம் பிசிசிஐயும், பாகிஸ்தானில் சென்று இந்திய அணி விளையாடாது என தெரிவித்துள்ளனர். இதனால், எந்த ஒரு சிறிய மாற்றமும் இல்லாமல் நேற்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதால், ஐசிசி, வேறு ஒருநாளைக்கு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்து நேற்று நடைபெற்ற கூட்டத்தை ஒத்தி வைத்தது. இதனால், அடுத்த கூட்டத்தில் இது குறித்த நிலையான ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.