சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!
இங்கிலாந்து தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணாவை நாங்கள் தேர்வு செய்திருக்கிறறோம் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் பற்றிய அறிவிப்பை இந்திய அணி வெளியீடாமல் இருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததது.
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.
பிஜிடி தொடரில் சிட்னி டெஸ்ட் பந்துவீச்சின்போது முதல் இன்னிங்ஸில் கேப்டனாக விளையாடி பும்ரா திடீரென காயம் ஏற்பட்டதாக போட்டியின் நடுவில் மருத்துவமனைக்கு சென்றார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை எனவும் மருத்துவரிடம் கூறி ஸ்கேன் செய்து பார்த்தார். ஆனால், இன்னும் அவருடைய உடல் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், காயம் காரணமாக பும்ரா அணியில் இடம்பெறுவாரா? அப்படி இடம்பெற்றால் கூட அவர் போட்டிகளில் விளையாடுவாரா? என்கிற வகையில் கேள்விகள் எழும்பியது. இதனையடுத்து , இன்று அணியை அறிவிக்கப்பட்ட நிலையில் அணியில் பும்ரா பெயரும் இடம்பெற்றது. எனவே, பும்ரா விளையாடுவாரா? என்கிற கேள்விக்கும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது ” சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் கூட அவர் அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சில போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இங்கிலாந்து தொடரில் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணாவை நாங்கள் தேர்வு செய்திருக்கிறறோம்.
நாங்கள் இன்னும் பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவலுக்காகக் காத்திருக்கிறோம்.பிசிசிஐ மருத்துவக் குழு மூலம் பும்ராவின் உடற்தகுதி பற்றிய விவரம் எங்களுக்கு பிப்ரவரி தொடக்கத்தில் தெரிய வரும் என நினைக்கிறேன். அப்போது தான் அவருடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். பும்ராவை ஐந்து வாரங்களுக்கு ஓய்வெடுக்கச் சொன்னேன். பிப்ரவரி முதல் வாரத்திற்குப் பிறகு அவர் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன்” எனவும் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.