சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்தியா சார்பாக யாரெல்லாம் விளையாடலாம்..முன்னாள் வீரர்கள் சொல்வதென்ன?

பிப்ரவரி 20-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

champions trophy 2025 india squad

துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டி முடிந்த பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகவுள்ளது.

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியை பங்களாதேஷிற்கு எதிராக பிப்ரவரி 20-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்த சூழலில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அணியில் விளையாடும் வீரர்கள் குறித்து தங்களுடைய பிளேயிங் லெவனை பகிர்ந்து கொண்டார்கள். அதனைப்பற்றி பார்ப்போம்.

பியூஷ் சாவ்லா

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அது குறித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் எனவும் அடுத்த வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோர் இடம்பெறவேண்டும் . ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்வேன். பந்துவீச்சு துறையில் குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இருக்கலாம்’ என தனது கருத்தை கூறினார்.

அணி : ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (தகுதி இருந்தால்), முகமது ஷமி.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரிஷப் பந்த் அணியில் இல்லாததால், இடைநிலை வரிசையில் இடம் பெறும் இடத்தை நிரப்ப ஒரு இடதுகை வீரரை சேர்ப்பது அணிக்கு பயனளிக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பதால், பந்தின் இடத்தை நிரப்ப புதிய இடதுகை வீரரை தேர்வு செய்வது அணியின் சமநிலையை மேம்படுத்தும். எனவே, ஜெய்ஷ்வாலை கொண்டு வரலாம் என தெரிவித்தார்.

ஹர்பஜன் சிங்

முன்னாள் ஆஃப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை-ஐ பற்றி வெளியிட்ட தகவலின் படி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, மற்றும் முகமது ஷமி ஆகியோரை தேர்வு செய்தார்.

சுனில் கவாஸ்கர்

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ” ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றால் சரியாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா

முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் ரோஹித் சர்மா, ஜெய்ஷ்வால், விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்தார்.

வாசிம் ஜாபர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒரே மாதிரியாக தான் அணியை தேர்வு செய்துள்ளனர். எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விரும்புவது போல அணி அமையுமா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அறிவிக்கப்பட்ட வீரர்கள் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா
முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்