சாம்பியன்ஸ் டிராபி 2025 : ரோஹித் தலைமையில் இந்திய அணி…பிசிசிஐ அறிவிப்பு!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் , நியூசிலாந்து, குரூப் ஏ பிரிவிலும், பி பிரிவில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளது.
இதில், இந்தியாவையும், பாகிஸ்தான் அணியையும் தவிர மற்ற அணிகள் தங்களுடைய வீரர்களை அறிவித்து விட்டனர். இன்று தான் கடைசி நாள் என்பதால் இந்தியா அறிவிக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவிருக்கும் 15 வீரர்கள் யார் என்கிற அறிவிப்பை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, …
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா.
இந்திய விளையாடவுள்ள போட்டிகள்
- பிப்ரவரி 20 – இந்தியா vs வங்கதேசம், துபாய்
- பிப்ரவரி 23 – இந்தியா vs பாகிஸ்தான், துபாய்
- மார்ச் 2 – இந்தியா vs நியூசிலாந்து, துபாய்
இந்திய தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் , மற்றும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இன்று(ஜன.18) பிற்பகலில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்திய அணியை அறிவித்தனர். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.