Ranji Trophy : 42-வது முறையாக சாம்பியன் ..! 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

Ranji Final [file image]

Ranji Trophy : இந்தியாவில் நடைபெற்று வந்த 96-வது ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் கடந்த  மார்ச்-10ம் தேதி அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் தனது முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய மும்பை அணி விக்கெட்டுகள் இழந்தாலும் தட்டு தடுமாறி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Read More :- இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னே விபத்துக்குள்ளானார் !

இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி மிகவும் மோசமாக விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி தங்களது 2-வது இன்னிங்ஸ்க்கு 119 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது. மும்பை அணியின் அபார பேட்டிங் மூலம் அந்த அணி 418 ரனக்ளுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

விதர்பா அணியில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் மற்றும் மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் விதர்பா அணிக்கு 528 என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை தொடர்நது 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. விதர்பா அணியின் கேப்டனான அக்ஷய் வாட்கர் 102 ரன்களும், ஹர்ஷ் துபே 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Read More :- IPL 2024 : இதுலயும் ‘தல’ தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா ..?

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய யாரும் நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடாமல் இருந்ததால். விதர்பா அணி 368 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளும், முஷீர் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதன் மூலம் 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 42-வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்