உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றால், லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயார்,” என, கோஹ்லி தெரிவித்தார்.
கடந்த 2002ல், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நாட் வெஸ்ட் தொடரின் பைனல், லண்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்தின் (325/5) இலக்கை துரத்திய இந்தியா (326/8), ‘திரில்’ வெற்றி பெற்றது. காலரியில் இருந்த அப்போதைய கேப்டன் கங்குலி, தனது சட்டையை கழற்றி, சுற்றியது பெரும் வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து நேற்று கங்குலி கூறுகையில்,” வரும் 2019 உலக கோப்பை தொடரில், லண்டன் லார்ட்சில் இந்தியா கோப்பை வென்றால், அனைத்து கேமராக்களும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், கோஹ்லி தனது சட்டையை கழற்றி ‘சிக்ஸ் பேக்சை’ காட்டத்தயாராக இருப்பார். சட்டையில்லாமல் ஆக்ஸ்போர்டு தெருவில் சுற்றி வந்தாலும் வருவார். இது உறுதி,” என்றார்.
இதற்கு பதில் தந்த கோஹ்லி கூறுகையில்,” கங்குலியின் கோரிக்கையை 120 சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன். இந்திய அணியில் நான் மட்டுமல்ல, பல்வேறு வீரர்கள் ‘சிக்ஸ் பேக்ஸ்’ வைத்துள்ளனர். பாண்ட்யா, பும்ரா உட்பட எல்லோரும், சட்டையை கழற்றி விட்டு, சுற்றிவரத் தயார்,” என்றார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…