சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து.? வெளிச்சத்துக்கு வந்த மணமுறிவுக்கான காரணம்.!

திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது அவர்களின் விவாகரத்துக்கான உண்மையான காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

chagal cricket player wife DIVORCE

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் பரஸ்பர விவாகரத்துப் பெற செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் இருவரும் Unfollow செய்தபோதே விவாகரத்து குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், இப்பொது விவாகரத்து தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், சாஹல் அவரது மனைவியை பிரிவதாக வதந்தி பரவியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் இறுதியாக தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக முடித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் திருமணமான நான்கு வருடங்களுக்குப் பிறகு பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதன்படி, நேற்றைய தினம் மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற இருவரின் விவாகரத்து வழக்கில் ஆஜராகி, இருவரின் சம்மதத்துடன் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம் விவாகரத்து அளித்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே, சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக் இவர்களின் பிரிவு தான். இருவருமே கடந்த 18 மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்து காரணம் என்ன?

நீதிமனறத்தில் ஆஜராகிய வர்கள் இருவரும், ​​தங்களுக்கிடையே எந்திவித ஒருங்கிணைப்பு இல்லை என்றும், இதனால் அவர்கள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், கடந்த 18 மாதங்களாக அவர்கள் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறியுள்ளனர். அதிகாரப்பூர்வ விவாகரத்தை பெறுவதற்கு முன்பு, நீதிமன்றம் இருவரும் ஒருமுறை கலந்து ஆலோசனை மேற்கொள்ளமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும், இருவரும் நாங்கள் ஒன்றாக வாழ முடியாது என்றும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுகிறோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் பின்னரே, நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாஹல் – தனஸ்ரீ திருமணம் :

சாஹலும் தனஸ்ரீ வர்மாவும் 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது சந்தித்ததாக சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் தனஸ்ரீயின் நடன வீடியோவைப் பார்த்த பிறகு, சாஹல் நடனம் கற்றுக்கொள்வதற்கு அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் நண்பர்களாகி, நாளடைவில் அது காதலாக மாறியது. தனஸ்ரீ மற்றும் யுஸ்வேந்திரா டிசம்பர் 2020 இல் திருமணம் செய்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்