இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
112 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், 15.1 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது கொல்கத்தா அணி.

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிபிகேஎஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணிக்கு 112 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. அந்த அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (30) அதிகபட்சமாக ஸ்கோர் செய்தார். தொடக்கம் ஆரவாரமாக தொடங்கினாலும் நான்காவது ஓவருக்குப் பிறகு பஞ்சாப் அணி தடுமாறியது.
முதல் நான்கு ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா (22) மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். பின்னர், ஜோஷ் இங்கிலிஸ் (2) மற்றும் நேஹல் வதேரா (10) ரன்களில் ஆட்டமிழந்து வலுவான ஆட்டத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டனர். 76 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. எட்டாவது ஆளாக களமிறங்கிய ஷஷாங்க் சிங் 18 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார்.
கொல்கத்தா அணி சார்பாக ஹர்ஷித் தனது மூன்று ஓவர்களில் 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் அன்ரிக் நோர்கியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, கொல்கத்தா அணி 112 என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது. இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே என்கிறது போல, 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி, 12 ஓவர்களில் 79 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் அடைந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக, அங்கிரிஷ் ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார். அஜிங்க்யா ரஹானே மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 17 ரன்கள் எடுத்தனர். குயின்டன் டி காக் 2, சுனில் நரைன் 5, வெங்கடேஷ் ஐயர் 7, ரின்கு சிங் 2, ஹர்ஷித் ராணா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், இறுதி வரை அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 15.1 ஓவர்களிலேயே 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோற்றது. பஞ்சாப் அணி சார்பாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே நேரம், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் குறைவான இலக்கை Defend செய்த அணி என்ற பெரிய சாதனை படைத்தது பஞ்சாப் அணி.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025