சிக்ஸ் அடிச்சா…இனிமேல் உங்களுக்கு இதான் தண்டனை ! – சுழற்பந்து வீச்சாளர் சாஹால்

சிக்ஸ் அடிச்சா…இனிமேல் உங்களுக்கு இதான் தண்டனை என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹால் கூறியுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்தில் எச்சில் மற்றும் வியர்வை தடவ தடை விதிக்க தடை என்று கூறியிருந்தனர். இதற்கு பதிலாக வேறு பொருளைக் கொண்டு பந்தை பளபளப்பு செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹால் ”ஐசிசியின் இந்த முடிவு பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான ஒன்றாக இருக்கும். அப்படி செய்தால் பந்து கையில் இருந்து வெளியிடுவதிலும், பந்தை ஸ்விங் செய்வதிலும் பாதிப்பு ஏற்படும். பேட்ஸ்மேன்களுக்கு பந்தை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும். இதற்கு சாஹால் சிக்ஸர் அடித்த பந்தை பேட்ஸ்மேன்களே எடுத்துவர வேண்டும்” என்று கூறியுள்ளார்.