அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடைசியாக நடந்து முடிந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது.
4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..!
தற்போது இங்கிலாந்து அணியின் இந்த விளையாட்டை பற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளரும் (Commentator) ஆன க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள் அவரது யூடுப் சேனலில் தனது மகனான அனிருதா ஸ்ரீகாந்துடன் நேரலையில் உரையாடும் போது விமர்சித்துள்ளார்.
அவர், “இங்கிலாந்து அணியினருக்கு முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ஆனால் என்ன அவர்கள் மீதம் உள்ள இரண்டு டெஸ்டில் விளையாடி தான் ஆக வேண்டும். அவர்களது ஆட்டம் அந்த அளவிற்கு மோசமாக உள்ளது. அவர்கள் விளையாடிகிற இந்த பேஸ்பால் (Base Ball) கிரிக்கெட் இங்கிலாந்து அணிக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காது. ஆனால் இங்கிலாந்து அணியின் ஜாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் இருவரின் டெஸ்ட் போட்டியின் சராசரி உயர்ந்துள்ள பேட்டிங் சற்று ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அது ஒன்றை நான் நல்ல விதமாக பார்க்கிறேன்.
எல்லா பந்தையும் அடிக்க வேண்டும் என்ற இந்த பேஸ்பால் கிரிக்கெட் இந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கை கொடுக்காது. ப்ரண்டன் மெக்கல்லமால் அடித்து விளையாட முடியலாம், பென் ஸ்டோக்ஸால் அடித்து விளையாட முடியலாம் ஆனால் எல்லா வீரராலும் இதை செய்ய முடியுமா என்பது தெரியாது. சில நேரங்களில் நீங்கள் போட்டிகளின் நிலைக்கு ஏற்றவாறு ஒத்துப்போக வேண்டி இருக்கும். இது எனது கருத்து ஒருவேளை இது தவறாகவும் இருக்கலாம்” , என்று க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து இருந்தார்.