ஐபிஎல் 2024 : பந்தை பறந்து பிடித்த பத்திரானா ..!! கை தட்டி பாராட்டிய தோனி ..!!
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார்.
நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி விக்கெட்டுகளை இழக்காமல் 10 ஓவர் வரை விளையாடினர்.
அதனை தொடர்ந்து 10-வது ஓவரை சென்னை அணியின் இடது கை பந்து வீச்சாளரான முஸ்த்தபிஸுர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் டேவிட் வார்னர் பந்தை பின்னாடி பவுண்டரைக்கு தட்ட முயன்றார். அப்போது ஷார்ட்- ஃபைன் லெக்கில் (Short Fine Leg) நின்று கொண்டிருந்த மதீஷா பத்திரனா அட்டகாசமாக பறந்து சென்று ஒற்றை கையில் அந்த கேட்சை பிடித்து அசத்தினார்.
அவர் பிடித்த அந்த கேட்ச் சற்றும் அவர் கூட எதிர்பாக்காத அளவிற்கு அவரது கையில் பிடிப்பட்டது. டெல்லி அணியில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த வார்னர் இந்த அட்டகாசமான கேட்சின் மூலம் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அட்டகாசமான கேட்சை பிடித்த மதீஷா பத்திரனாவை சென்னை அணியின் சக வீரர்கள் கை தட்டி பாராட்டி அவரை ஊக்குவித்தனர்.
அதே போல கீப்பிங் நின்ற ‘தல’ தோனியும், அவர் பிடித்த அந்த கேட்சை வியந்து பார்த்து அவரை கை தட்டி பாராட்டினார். இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மேலும், மைதானத்தில் இருந்த சென்னை அணியின் ரசிகர்கள் பத்திரானவை பாராட்டி அவர் பிடித்த கேட்சுக்கு 120 டெசிபல் அளவிற்கு கூச்சலிட்டு அவரையும், சிஎஸ்கே அணியையும் உற்சாகப்படுத்தினார்கள்.
???????????????????????????? ????
Matheesha Pathirana takes a one hand diving catch to dismiss David Warner who was on song tonight
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ????????#TATAIPL | #DCvCSK | @ChennaiIPL pic.twitter.com/sto5tnnYaj
— IndianPremierLeague (@IPL) March 31, 2024