ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் வெற்றி குறித்து விராட் கோலி தன் அனுபவங்களை கூறுயுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 116 (120) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
வெற்றி குறித்து பேசிய விராட் கோலி நான் போட்டியில் களமிறங்கும் போது ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்தது.
நான் எனது தலையை அடமானம் வைத்து விளையாடினேன். எனக்கு வேறு வழியும் இல்லை.
விஜய் சங்கரும் , நானும் சிறந்த ஜோடியாக விளையாடினோம். விஜய் சங்கர் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார்.
எதிர்பாராத விதமாக விஜய் சங்கர் ரன் அவுட் ஆகிவிட்டார். 250 ரன்களை கடந்து விட்டால் இலக்கு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்.
ரோகித் ஷர்மா மற்றும் தோனி இவர்களின் ஆலோசனையை நான் கேட்டேன். பும்ரா மற்றும் ஷமி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்திருந்தால் போட்டி இன்னும் சரியாக சென்றிருக்கும்.
விஜய் சங்கர் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார்.துணைக் கேப்டன் ரோகித் மற்றும் தோனி இருவரும் ஆட்டத்தை துல்லியமாக கவனித்தனர்.
அவர்களின் அனுபவம் எனக்கு பக்க பலமாக இருந்தது.பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன் , அவர் நமது அணியில் இருப்பது நமக்கு தான் பெருமை. அவர் பந்து வீசும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும் என விராட் கோலி கூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…