விஜய் சங்கர் மற்றும் பும்ரா இருவரையும் புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி !!!!

Default Image
  • பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன் , அவர் நமது அணியில் இருப்பது நமக்கு தான்  பெருமை.
  • விஜய் சங்கர் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார்.

ஆஸ்திரேலியா அணிக்கு  எதிரான 2வது ஒருநாள் போட்டியின்  வெற்றி குறித்து விராட் கோலி தன் அனுபவங்களை கூறுயுள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு  எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 116 (120) ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

வெற்றி குறித்து  பேசிய விராட் கோலி  நான் போட்டியில் களமிறங்கும் போது  ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்தது.

நான் எனது தலையை அடமானம் வைத்து விளையாடினேன். எனக்கு வேறு வழியும் இல்லை.

விஜய் சங்கரும் , நானும் சிறந்த ஜோடியாக விளையாடினோம். விஜய் சங்கர் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடினார்.

எதிர்பாராத விதமாக விஜய் சங்கர்  ரன் அவுட் ஆகிவிட்டார். 250 ரன்களை கடந்து விட்டால் இலக்கு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

ரோகித் ஷர்மா மற்றும் தோனி இவர்களின் ஆலோசனையை நான் கேட்டேன். பும்ரா மற்றும் ஷமி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்திருந்தால் போட்டி இன்னும் சரியாக சென்றிருக்கும்.

விஜய் சங்கர் இந்த போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறந்தவர் என்பதை காட்டிவிட்டார்.துணைக் கேப்டன் ரோகித் மற்றும் தோனி இருவரும் ஆட்டத்தை துல்லியமாக கவனித்தனர்.

அவர்களின் அனுபவம் எனக்கு பக்க பலமாக இருந்தது.பும்ரா உண்மையில் ஒரு சாம்பியன் , அவர் நமது அணியில் இருப்பது நமக்கு தான்  பெருமை. அவர் பந்து வீசும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும் என விராட் கோலி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்