கேப்டன் ரூட் இரட்டை சதம் ! வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்துள்ள நிலையில் தற்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.முதல் நாளான நேற்று இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது.இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கியது.ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் ஜோடி சிறப்பாக விளையாடியது.ஓரளவு அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் 82 ரன்களில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் போப் களமிறங்கி ரூட் -வுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்த நிலையில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. 147 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் அடித்துள்ளது.தற்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது.களத்தில் ரூட் 209 ரன்களுடனும் ,போப் 24 ரன்களுடனும் உள்ளனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024