இலங்கை சுற்றுப்பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா? வெளியான சூப்பர் தகவல்!

rohit sharma

ரோஹித் சர்மா : டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை இந்திய அணி வென்ற  நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டனர். இதனையடுத்து,  ரோஹித் சர்மா, விராட் கோலி ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய மூன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் விடுமுறைக்கு சென்று குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள்.

விடுமுறை எல்லாம் முடிந்த பிறகு ஆண்டின் இறுதியில் வங்காள தேசத்திற்கு எதிரான தொடரில் திரும்பவும் விளையாட அணிக்கு திரும்புவார்கள் என தகவல்கள் வெளியானது. ஆனால் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மூத்த வீரர்கள் மூன்று போட்டி ஒருநாள் தொடருக்காக ஸ்ரீலங்காவிற்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறாராம்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மிகப்பெரிய போட்டிக்கு முன்பு இந்தியா மொத்தம் ஆறு ஒருநாள் போட்டிகளை மட்டுமே விளையாடவுள்ளது என்பதால், முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் மூத்த வீரர்கள் விளையாட வேண்டும் என யோசிக்கிறாராம். எனவே. இதன் காரணமாக ரோஹித்  சர்மாவையாவது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட வைக்க கம்பீர் திட்டமிட்டு இருக்கிறாராம்.

எனவே, இதன் காரணமாக ரோஹித் சர்மா தன்னை தயார் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், விராட் கோலி, மற்றும்  பும்ரா தொடர்ந்து விடுமுறையில் இருக்கலாம். ரோஹித் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் ஒரு வேளை அவர் இந்தியாவுக்கு திரும்பினார் என்றால் கண்டிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரோஹித் விளையாடினால், அவர் அணியை நிச்சயமாக தலைமை தாங்குவார், ஆனால் அவர் விளையாடாவிட்டால், மூத்த வீரர் கேஎல் ராகுல் செயல்படவும் வாய்ப்புகள் இருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி இருங்கிறது. மேலும், இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடருக்கான அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை, விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
rohit sharma about mi
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu