rohit sharma speech [file image]
Rohit Sharma : உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் என்று விரும்புவதால் இப்போதைக்கு ஓய்வு பற்றி எண்ணம் இல்லை என கூறியுள்ளார். கௌரவ் கபூர் எடுத்த நேர்காணலில் பேட்டியளித்த ரோஹித் சர்மா “உண்மையில் நான் இப்போது ஓய்வு பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், வாழ்கை நம்மளை எப்படி எங்கு அழைத்து செல்கிறது என்பதை பற்றி யோசிக்கவே முடியாது.
இருந்தாலும் இந்தியாவுக்காக நான் உலகக்கோப்பையை வாங்கி கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது நான் நன்றாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட் விளையாடுவேன். 2027-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இருக்கிறது. அந்த இறுதிப்போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெற்றும் என நம்புகிறேன்.
கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தது சற்று வருத்தமாக தான் இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்பு வரை நாங்கள் ரொம்பவே நன்றாக விளையாடினோம். அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டோம் அந்த ஒரு போட்டியை வெற்றிபெற்றுவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து விளையாடினோம்.
அப்படி நினைத்துக்கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினோம் ஆனால், அன்றைய நாள் எங்களால் எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. அதனால் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று யாரும் நினைக்கவேண்டாம். எங்களால் முடிந்த அளவுக்கு நன்றாக விளையாடினோம் இருந்தாலும் எங்களுக்கு சில விஷயங்கள் சரியாக இல்லை வருகின்ற உலகக்கோப்பையில் வெற்றிபெறுவோம்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…