ஆஷஸ் கோப்பையையும் , கனவையும் இழந்த கேப்டன் ஜோ ரூட்..!
பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது யூசுப் வரலாற்று சாதனையை ஜோ ரூட் முறியடிக்க முயன்ற முயற்சி வீணானது.
மெல்போர்னில் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் கனவும் வீணானது.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப்பின் ஒரு வருடத்தில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்து இருந்தார். அந்த சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முறியடிக்க முடியாமல் அதுவும் வீணானது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று 28 ரன்களில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார். இதனால், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 1,708 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒரு வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தானின் முகமது யூசுப் உள்ளார். இந்த சாதனையை முகமது யூசுப் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1,788 ரன் எடுத்து படைத்தார். மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் 1976-ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1,710 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் தான் தற்போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 1,708 ரன்களுடன் உள்ளார்.
ஆனால் யூசுப் மற்றும் ரிச்சர்ட்ஸ் இருவரையும் விட ஜோ ரூட் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்தைப் பிடித்தாலும், முகமது யூசுப் சாதனையை ஜோ ரூட் முறியடிக்கவில்லை.
- முகமது யூசுப்- 11 டெஸ்டில் 1788 ரன்கள்
- ரிச்சர்ட்ஸ்- 11 டெஸ்ட் போட்டிகளில் 1710 ரன்கள்
- ஜோ ரூட் – 15 டெஸ்டில் 1708 ரன்கள்