டி20I: இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 13-வது போட்டியில் அயர்லாந்து அணியும், கனடா அணியும் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கியது கனடா அணி.
அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கனடா அணி, அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி திணறியே ஸ்கோரை எடுத்தது. மேலும், அணியில் எந்த ஒரு வீரரும் சரியாக விளையாடாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்கள். அந்த அணியில் நிக்கோலஸ் கிர்டன் மட்டும் என்ற பொறுப்புடன் விளையாடி 49 ரன்களை சேர்த்தார்.
இதனால் இறுதியில் 20 ஓவருக்கு கனடா அணி 7 விக்கெட் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து 138 ரன்கள் என்ற எளிய இலக்கை எடுத்தால் வெற்றி பெறலாம் என களமிறங்கியது அயர்லாந்து அணி. ஆனால், அவர்கள் நினைத்ததை விட கனடா அணியின் பலமான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 59-6 என்ற பரிதாப நிலையில் திணறி வந்தது அயர்லாந்து அணி.
அதன் பின் ஜார்ஜ் டோக்ரெல் மற்றும் ஜார்ஜ் டோக்ரெல் இருவரும் இணைந்து பொறுப்புடன் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்து விளையாடினர். விறுவிறுப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் அயர்லாந்து அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. கனடா அணியின் வீரரான ஜெர்மி கார்டன் சிறப்பாக பந்து வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து கனடா அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் கனடா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து அயர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது.
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…