ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவார் என்று கூறலாம்.இதுவரை இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 9 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடி இருக்கிறார். 9 போட்டிகளில் 345 ரன்கள் ஒரு சதமும் அடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக அவர் பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் எப்படி விளையாடப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்ரேலியா அணியின் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித்தும் “எங்களுடைய அணியில் ஹெட் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவார். அவருடைய விக்கெட்களை எடுக்க திட்டமிடுவார்கள். அது அவர்களுக்கு சவாலாக இருக்கும்” என்பது போல பேசியிருந்தார்.
அவர் பேசியதை போலவே போட்டி தொடங்கி ஆஸ்ரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹெட் ஆரம்பத்திலே 1 சிக்ஸர் பவுண்டரி என அதிரடி காட்டினார். இரண்டு முறை அவரை அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆன காரணத்தால் ஸ்மித் சொன்னது போல முதலில் இந்திய வீரர்கள் திணறினார்கள். அவரும் அதிரடி காட்ட கடைசியில் 33 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஹெட் அதிரடியாக விளையாடியதை பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திட்டம் ஒன்றை போட்டு சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்தார். 8-வது ஓவரை வீச வந்த அவருடைய இரண்டாவது பந்தை ஹெட் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், அவர் அடித்த அந்த ஷாட்டில் டைமிங் சரியாக இல்லை என்ற காரணத்தால் சுப்மன் கில்லிடம் கேட்சாக சென்றது.
இதனால் சோகத்துடன் ஹெட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். முன்னதாக ஸ்மித் இந்திய வீரர்கள் ஹெட் விக்கெட் எடுப்பது சவாலாக இருக்கும் என சவால் விடும் வகையில் பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொஞ்சம் விரிவாகவே இந்திய அணி அவருடைய விக்கெட்டை வீழ்த்தி உள்ளது.