120 ரன்கள் அடிக்க முடியுமா? ரிஷப் பண்ட்க்கு சவால் விட்ட மைக்கேல் வாகன்!
ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறங்கி விளையாட வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்களிலும், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக அவருடைய கேப்டன் சி நன்றாக இருந்தாலும் கூட பேட்டிங் சரியாக இல்லை என்ற காரணத்தால் நெட்டிசன்கள் பலரும் அவருடைய பேட்டிங்கை விமர்சித்து பேசி வருகிறார்கள். இருப்பினும் அவர் சிறந்த வீரர் எப்போது வேண்டுமானாலும் பழைய பார்முக்கு திரும்புவார் என்பதால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரிஷப் பண்ட் ரசிகர்கள் சீக்கிரமே சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பார் என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது ரிஷப் பண்டுக்கு சில அட்வைஸ்களை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட் நிக்கோலஸ் பூரன் போல சிறந்த ஒரு வீரர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் அவரால் எல்லா இடங்களிலும் ஆட முடியும் – மேல் வரிசையில் (top order) அற்புதமாகவும், 3 அல்லது 4வது இடத்தில் சிறப்பாகவும், 5 மற்றும் 6வது இடங்களில் சிறந்த பங்களிப்பை அளிக்கவும் முடியும்.
ஆனால், அடிப்படையாக, நான் அவரை பார்த்தும் கேட்பேன், ‘அவனால் தனியாக 120 ரன்கள் எடுக்க முடியுமா?’ என்று. அந்த கேள்விக்கும் என்னிடமே பதில் இருக்கிறது. அவரால் நிச்சயமாக 120 ரன்கள் எடுக்க முடியும். ரிஷப் 4வது இடத்தில் பவர்பிளேக்கு வெளியே வரும்போது அவரை பந்துவீச்சாளர்கள் பவுன்சர்கள் வீசுகிறார்கள். ஆனால், பவர் பிளேயில் அவர் இறங்கி விளையாடினார் என்றால் அவருடைய விளையாட்டே வேறு மாதிரி இருக்கும்.
வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பதால் நிச்சியமாக அவர் சிக்ஸர்கள் தான் பறக்கவிடுவார். பவர்பிளேக்கு வெளியே, நான்கு ஃபீல்டர்களைத் தவிர மற்ற அனைவரும் வெளியே இருக்கும்போது, ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரரை 4வது இடத்தில் வரும்போது அவர் விரைவாக ஆட்டமிழப்பதாக நினைக்கிறேன். எனவே, என்னைப்பொறுத்தவரை அவர் ஓப்பனிங் இறங்கவேண்டும். அவரிடம் சதம் மேல் ரன்கள் அடிக்கும் திறன் இருக்கிறது. எனவே என்னை கேட்டால் அவரை தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கி முயற்சி செய்யலாம்” எனவும் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025