கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பிட்டர்சன் பேசியுள்ளார்.
அப்பொழுது அவர், சில அம்சங்களின் அடிப்படையில் கோலியை எவ்வாறு மதிப்பிட்டார் என்பதை தோனி வெளிப்படுத்தியதாக கூறினார். 2016-ம் ஆண்டில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணிக்காக பீட்டர்சன் விளையாடி வந்தார். அப்பொழுது அந்த தகவலை தோனி கூறியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “5-6 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது தோனி, “விராட் தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம். தற்பொழுது 5-6 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் கோலி, ஒரு குழந்தையாக இருந்ததைப் போலவே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…