ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது.
இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக இன்றைய போட்டியில் சன்ரைடர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் மோதும் பொழுது ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்தது. அந்த போட்டியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
பெங்களூரு அணியும் அந்த போட்டியை கடுமையாக முயற்சித்தது வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வியடைந்தது. அதிலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் தான் ஹைதராபாத் அணி நிர்ணயித்த ஸ்கோரின் அருகில் வரை செல்ல முடிந்தது. இதனால் திருப்பி கொடுக்க ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
நேருக்கு நேர் :
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் தலா 24 போட்டிகளில் விளையாடி உள்ளது அதில் 10 போட்டிகள் பெங்களூர் அணியும் 13 போட்டிகள் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது மேலும் ஒரு போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. இதன் மூலம் இந்த போட்டியை ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் :
ஹைதராபாத் அணி வீரர்கள் :
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்.
பெங்களூரு அணி வீரர்கள் :
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…