இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைய பிசிசிஐ கட்டண முறைப்படி, 40-க்கும் மேற்பட்ட ரஞ்சி போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ஒரு நாளைக்கு ஊதியமாக ரூ.60,000 ரூபாயும், 21 முதல் 40 போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு ஊதியமாக ரூ.50,000 ரூபாயும், வெறும் 20 ஆட்டங்களில் விளையாடியவர்களுக்கு ரூ.40,000 ரூபாயும் பிசிசிஐ வழங்குகிறது. மேலும், மாற்று வீரர்களாக இருப்பவர்களுக்கு ரூ.30,000, ரூ.25,000 மற்றும் ரூ.20,000 வரை பிசிசிஐ வழங்குகிறது.
இதன் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தல் ஒரு சீனியர் வீரரின் அணி ஒரு வேளை இறுதிப் போட்டியை எட்டினால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் ரூ.17 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும், விளையாடும் வீரர்கள் விஜய் ஹசாரே மற்றும் முஷ்டாக் அலி போன்ற உள்நாட்டு தொடர்களிலிருந்தும் இன்னும் அதிக வருவாயைப் பெறுவார்கள். இதனால் உள்நாட்டில் சிறப்பா கிரிக்கெட் மட்டும் விளையாடும் ஒரு வீரர் கூட ரூ.கோடி வரை சம்பாதிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம் என வெளியான தகவல்கள் மூலம் க்ரிக்பஸ்ஸின் அறிக்கையில் தெரிகிறது. இது போன்ற திட்டங்களின் நோக்கம் என்னவென்றால் இந்திய நாட்டின் முதன்மையான உள்நாட்டுப் தொடரான ரஞ்சி கோப்பையில் பங்கேற்க வீரர்களை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் சில நோக்கத்துடன் பிசிசிஐ இந்த யோசனை எடுத்துள்ளது என்று தெரிகிறது என்று க்ரிக்பஸ் வலைத்தளம் அறிக்கையில் அறிவித்துள்ளது.
இதற்கு முன் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டி ஊதியத்தை உயர்த்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கான கட்டணத்தை இரட்டிப்பாக்க அல்லது மூன்று மடங்காக உயர்த்த பரிந்துரை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025