இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் பகலிரவு போட்டிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டி :
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
கங்குலி தீவிர முயற்சி :
இந்த போட்டி பகலிரவு போட்டியாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தார்.குறிப்பாக ரசிகர்களை கவரும் விதமாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிறப்பு ஏற்பாடுகள் :
இந்த பகலிரவு போட்டிக்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் ரசிகர்களை கவர பல்வேறு யுக்திகளை பயன்படுத்தவுள்ளது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.போட்டி நடைபெறும் போது துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலமாக இரண்டு அணி கேப்டன்களிடமும் பிங்க் நிறப்பந்தை வழங்குகின்றனர்.போட்டி தொடங்கி முடியும் வரை மைதானத்தின் அருகே பிங்க் நிறத்தில் பலூன் பறக்க விடப்படும்.
இந்த போட்டியில் பிங்கு மற்றும் டிங்கு என்ற பிரமாண்ட பலூன் மனிதர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.ஹவுரா பாலம்,சாகித் மினார் உள்ளிட்ட பல இடங்கள் வண்ண வ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி அனைவரின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…