முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியால் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா – காரணம் இதுதான்

Default Image

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் பகலிரவு போட்டிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பகலிரவு டெஸ்ட் போட்டி :  
வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
கங்குலி தீவிர முயற்சி :
இந்த போட்டி பகலிரவு போட்டியாக கொல்கத்தாவில்  உள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தார்.குறிப்பாக ரசிகர்களை கவரும் விதமாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிறப்பு ஏற்பாடுகள் : 

இந்த பகலிரவு போட்டிக்கு ஏற்பாடு செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் ரசிகர்களை கவர பல்வேறு யுக்திகளை பயன்படுத்தவுள்ளது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.போட்டி நடைபெறும் போது துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலமாக இரண்டு அணி கேப்டன்களிடமும் பிங்க் நிறப்பந்தை வழங்குகின்றனர்.போட்டி தொடங்கி முடியும் வரை மைதானத்தின் அருகே பிங்க் நிறத்தில் பலூன் பறக்க விடப்படும்.

இந்த போட்டியில் பிங்கு மற்றும் டிங்கு என்ற பிரமாண்ட பலூன் மனிதர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.ஹவுரா பாலம்,சாகித் மினார் உள்ளிட்ட பல இடங்கள் வண்ண வ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி அனைவரின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்