பிசிசிஐயின் ஸ்பான்சர்ஷிப்பை முடித்துக்கொள்ளும் பைஜூஸ், எம்பிஎல் நிறுவனங்கள்.!

Default Image

பைஜூஸ், எம்பிஎல் ஆகிய இரு நிறுவனமும் பிசிசிஐ உடனான தங்களது  ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக தகவல்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர்களான பைஜூஸ் மற்றும் எம்பிஎல் ஆகிய இரண்டும் பிசிசிஐ உடனான ஒப்பந்தங்களை முன்கூட்டியே முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்ஒப்பந்தம் 2023 இன் இறுதியில் காலாவதியாக உள்ளது, ஆனால் அதற்கு முன்கூட்டியே அவர்கள் ஒப்பந்தங்களை முடிக்க விரும்புவதாக பிசிசிஐக்கு தெரிவித்தனர்.

முன்னதாக ஜூன் 2022 இல், பைஜூஸ் நிறுவனம் பிசிசிஐ உடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை, நவம்பர் 2023 வரை நீட்டித்திருந்தது, 2019 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக பைஜூஸ் ஒப்பந்தத்தை பெற்றது. இதேபோல் எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடையும் தங்கள் ஒப்பந்தத்தையும் முடித்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளது.

எம்பிஎல் ஆனது 2020 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றுக்கொண்டது. ஆனால் பிசிசிஐ தரப்பில் அடுத்த ஆண்டு மார்ச் 2023 வரையிலாவது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை தொடர இரு நிறுவனங்களையும் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்