பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

Indian Team

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களை தவிர மீதம் இருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மே-25 ம் தேதி நியூயார்க் புறப்படுவார்கள் என்று தெரிகிறது.

அதே போல மீதம் உள்ள அதாவது ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மே 26-ம் தேதி நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியில் கலந்து கொண்டு அடுத்த நாளான மே-27-ம் தேதி அன்று நியூயார்க் புறப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிகிறது. இதனால், ஐபிஎல் தொடர் அணிகளில் டி20 அணியில் இடம்பெற்றிருக்கும் அதிக வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா என 4 வீரர்கள் மும்பை அணியிலும், ரிஷப் பண்ட், குலதீப் யாதவ், அக்சர் பட்டேல் என 3 வீரர்கள் டெல்லி அணியிலும், பஞ்சாப் அணியின் ஹர்ஷதீப் சிங் என மொத்தம் 8 வீரர்கள் மே 25-ம் தேதி புறப்படுவார்கள் என்று தெரிகிறது.

மேலும், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், சாஹல், சென்னை அணியில் சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, கொல்கத்தா அணியில் இருக்கும் ரிங்கு சிங் ஆகியவர்களில் இறுதி போட்டிக்கு செல்லும் அணியில் இருப்பவர்களை தவிர மற்ற வீரர்களும் இவர்களுடன் புறப்படுவார்கள் மே 25-ம் தேதி அன்று புறப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ம் தேதி அன்று ஒரு புறம் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கினாலும் மறுபுறம் இந்திய அணியும், வங்காளதேச அணியும் டி20 உலகக்கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதை தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி அன்று இந்திய அணி தனது முதல் டி20 உலகக்கோப்பைக்கான போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்