பை பை ஆஸி. ! த்ரில் வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் வைத்து மோதியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அவரை தொடர்ந்து நிலையாக எந்த ஒரு வீரரும் விளையாடமால் அதிர்ச்சியளித்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 2-வது இன்னிங்ஸ் தொடங்கும்  முன்பே பல கணித முறைகள் வகுக்கப்பட்டது.

அதில், இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் வங்கதேச அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் 12.1 ஓவர்களை தாண்டி வங்கதேச அணி வெற்றி பெற்றார்கள் என்றால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் போட்டியை வென்றால் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வார்கள் என்றும் விறுவிறுப்பாகவே தொடங்கியது.

அதன்பிறகு வங்கதேச அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது, தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த வங்கதேச அணி விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தனர்.

மேலும், ரஷீத் கானின் அபாரமான பந்து வீச்சால் வங்கதேச அணி நிலை குழைந்து போனது. மேலும், மழை அவ்வப்போது குறிக்கிட்டதன் காரணமாக 1 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 114 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 9 பந்துக்கு 9 ரன்கள் இருந்த நிலையில் 2 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து அந்த 2 விக்கெட்டையும் இழந்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. இதன் மூலம்  8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரிலிருருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, வரும் ஜூன்-26ம் தேதி தென்னாபிரிக்கா அணியும்,   அணியும் முதல் அரை இறுதி போட்டியிலும், ஜூன்-27ம் தேதி இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் 2-ம் அரை இறுதி போட்டியிலும் விளையாடவுள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

31 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

59 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

1 hour ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago