ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து சந்தோசமாக இருந்து வருகிறார். இவர், தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பின்னர் இளையராஜாவின் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலுக்கு குடும்பத்துடன் டிக்டாக் வீடியோ வெளியிட்டுருந்தார்.
தற்போது வார்னர் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது, தெலுங்கு படமான அலா வைகுந்தபுரமுலோ படத்தில் இருந்து ‘புட்டபொம்மா’ பாடலை தொடர்ந்து ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. இதனிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ என்ற பாடலுக்கு நடனமாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…