இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டி 20 போட்டியில் களமிறங்கும் பட்லர்..!

இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அணிக்கு ஜோஸ் பட்லர் திரும்ப உள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்து இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் காயத்தில் இருந்து மீண்ட பட்லர் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜோஸ் பட்லர் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளார். பட்லருக்கு அனுபவம் உண்டு, அவர் வரிசையில் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்று இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பால் கோலிங்வுட் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025