ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 5 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த தேவ்தட் படிக்கல் சிறப்பாக விளையாடியடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 12 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடி 30 எடுத்து பெவிலியன் திரும்பினார். மத்தியில் இறங்கிய ஹெட்மியர் 14 பந்தில் 35 ரன்கள் விளாசினார். அதில் 17வது ஓவரில் 2 சிக்சர் 3 பவுண்டரி விளாசினார். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி வந்த பட்லர் 66 பந்தில் சதம் விளாசி பும்ரா ஓவரில் போல்ட் ஆனார். அதில் 11 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசினார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…