உலகக்கோப்பை தொடர் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை நாளை தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு முதல் போட்டி என்பதால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ளது.இந்த அணி இந்த உலக்கோப்பையில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் மூன்றாவது போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நாளை இந்திய அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப் பட்டது பெரும் சர்ச்சையானது.நேற்று பயிற்சி ஈடுபட்டு இருந்தபோது பும்ராவை ஊக்க மருந்து தடுப்பு பிரிவினர் அழைத்து சென்றனர்.பும்ராவை அழைத்து சென்றதை மைதான அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும் பும்ராவிற்கு இரண்டு கட்டமாக சோதனை நடத்தப்பட்டது.முதல் சோதனையில் சிறுநீர் சோதனையும் ,பிறகு 45 நிமிடம் கழித்து இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனை முடிவு பற்றிய தகவல் வெளிவரவில்லை. மேலும் வேறு எந்த வீரருக்கு சோதனை செய்தார்கள் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. இந்த ஊக்க மருந்து சோதனையை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…