BREAKING: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்! வெளியான தகவல்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா, தற்போது விலகியுள்ளதாக தகவல்.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர்களில் விளையாடும் இந்திய அணியில், வெகு நாட்களுக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார்.
பும்ரா, கடந்த செப்டம்பரில் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அவர் காயம் குணமடையாததால் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தார். நீண்ட நாட்களுக்குப்பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார், ஆனால் பும்ரா அணியில் இணைவது தற்போது இன்னும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
அவர் விரைவில் இந்திய அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.