பும்ரா இன்னும் டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்படவில்லை – கங்குலி

Default Image

டி-20 உலகக்கோப்பை 2022க்கான இந்திய அணியிலிருந்து பும்ரா இன்னும் நீக்கப்படவில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென் ஆப்பிரிக்கா மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி-20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியை முன்னிட்டு பயிற்சி எடுக்கும் போது பும்ரா முதுகு வலி காரணமாக அந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வலி தீவிரமடைந்துள்ளதால் இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்தும் பும்ரா விலகக்கூடும் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பும்ராவின் விலகல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, டி-20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் நாட்கள் இருக்கின்றன, பும்ரா டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வருவதற்கு முன் நீங்களாக முடிவு செய்ய வேண்டாம் என்று கங்குலி மேலும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்