ஒருநாள் தொடரிலும் பும்ரா இல்லை – பிசிசிஐ அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லை.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் தொடருக்கு முன்னதாக, கவுகாத்தியில் இந்திய அணியில் சேர இருந்த பும்ராவுக்கு, பந்துவீச்சை வலுப்படுத்த இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யாரையும் குறிப்பிடவில்லை. இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை இலங்கைக்கு எதிராக ஜனவரி 10ஆம் தேதி கவுகாத்தியில் விளையாடுகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (w), இஷான் கிஷன் (w), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.