அஷ்வினை பின்னுக்கு தள்ளிய புயல் பந்து…அசத்தல்..முதல் இடத்தை முத்தமிட்டு சாதனை

- டி20 போட்டிகளில் இந்திய அணியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்ரா
- முதல் இடத்தை முத்தமிட்டு சாதனை
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் அன்மையில் நடைபெற்றது.இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இந்திய அணி பேட்டிங்க் செய்ய களமிரங்கியது.இந்திய அணிக்கு ராகுல்-தவான் ஜோடி சிறப்பான ஒரு துவக்கம் கொடுத்தது.இலங்கை அனியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.
அதன் பின் சந்தகன் சுழலில் சிக்கிய தவான் (52) ஆட்டமிழக்கவே ராகுல் 54 ரன்கள் எடுத்தார்.அடுத்து களமிரங்கிய சாம்சன் (6 ),ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் (4) ரன்களிலும் ஆவுட் ஆகிய நிலையில் கேப்டன் கோலி (26) ரன்னில் அவுட்டானார். அதன் பின் களமிரங்கிய வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்டி விளாசவே கிடுகிடுவென ரன்கள் உயர்ந்து 202 ரன் களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலக்கை விரட்ட இலங்கை களமிரங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களை அதிரடி காட்டி ஆப் செய்தார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் இதனால் அந்த அணி 15.5 ஓவர்களில் 123 ரன் கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.அதன்படி டி20 களில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய வீரர்கள் சாஹல் மற்றும் அஸ்வின் என இருவரும் 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025