கும்ப்ளேவை போல பந்துவீசும் பும்ரா.. சுழற்பந்து வீச்சாளராக மாறினாரா?
இந்திய அணியில் சுழற்பந்து ஜாம்பவானான அணில் கும்ப்ளேவை போலவே, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீசும் காட்சிகள், இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது.
மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. அடுத்த நடைபெறும் டி-20 தொடர் அனைத்தும் அஹமதாபாத்தில் நடைபெறும் எனவும், மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெறுகிறது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மேலும், இரு அணிகளும் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், இந்திய அணியின் ஜாம்பவான் அணில் கும்ப்ளேவை போல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சுழற்பந்துவீசி பயிற்சி பெற்றுவரும் விடியோவினை இந்திய கிரிக்கெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “பும்ரா, கடுமையான யாக்கர், வேகமான பவுன்சர்களை வீசித்தான் பார்த்துள்ளோம். இதுவரை பார்த்திடாத வகையில் அவர் கும்ப்ளேவை போல சுழற்பந்தும் வீசி வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
We have all seen @Jaspritbumrah93‘s fiery yorkers and sharp bouncers. Here’s presenting a never-seen-before version of the fast bowler.
Boom tries to emulate the legendary @anilkumble1074‘s bowling action and pretty much nails it! pic.twitter.com/wLmPXQGYgC
— BCCI (@BCCI) January 30, 2021