“கோலிக்கு பதில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுங்கள்! இல்லையெனில்…” ரசிகர்கள் கோரிக்கை!

Default Image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு பதில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்,

சென்னை டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 4 தோல்விகள்:

மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காம் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் கோலி தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் அடிலெய்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

பின்னர் நான்காம் முறையாக, சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், கோலி மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ட்விட்டரில் பலரும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கேப்டனாக ரஹானே:

அடுத்தடுத்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் இந்திய அணி வாஷ்-அவுட்டை சந்திக்க நேரிடும் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை ட்விட்டர் உட்பட சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். ரஹானே, அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். இந்திய அணியின் வீரர்கள் பலரும் காயத்தில் இருந்தபோது அவரின் தலைமையில் இருந்த இளம் வீரர்களை கொண்ட அணி, தொடரை சமன் செய்தது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்