கோலி தாண்டவம் ஆட ஆரம்பிச்சா தடுக்கிறது ரொம்ப கஸ்டம் -கேப்டன் அட்வைஸ்
உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.
சவுதம்டனில் இந்திய மற்றும் நியுசிலாந்து இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் கோலி தலமையிலான இந்திய அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா இந்திய கேப்டன் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது :
கோலியன் தலைமையில் இந்திய அணி உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.கோலி ஒரு மனிதரே இல்லை அவர் ஒரு ரன் மிஷின்.கோலி இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம்.அவரின் அதிரடி ஆட்டத்தை பார்க்கும் போது 80 மற்றும் 90 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை நினைவுப் படுத்துகிறது.
சச்சினோடு கோலியை ஒப்பிட முடியாது.ஆனால் கோலி பல திறமைகளை தன்னுள்ளே கொண்டவர்.அவர் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வர்.அவர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்.
இந்திய அணியின் மற்றுமொரு அதிரடி பந்து வீச்சுக்காரர் பும்ரா இவருடைய பந்தை எப்படி சமாளிப்பது என்ற வழியை பேட்ஸ்மேன்கள் தேடுகிறார்கள்.உலக அணிகளை எல்லாம் உற்றுநோக்க வைத்துள்ளார். நான் அவருடைய பந்தை எதிர்கொண்டால் எனக்கு எதிரே உள்ள பேட்ஸ்மேன்களுக்கு விட்டு விடுவேன் என்று தெரிவித்தார்..