42 வயசுல இப்படியா? தோனியை பார்த்து வியந்த பிரையன் லாரா!

Published by
பால முருகன்

Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் தோனி இந்த சீசன் ஐபிஎல் போட்டிக்களில் கடைசி ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி கொண்டு இருக்கிறார். கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரி என 9 பந்துகள் விளையாடி 28 ரன்கள் அடித்து இருந்தார்.

42 வயதில் இப்படி ஒரு வீரர் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது என அவருடைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் தோனியை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” இந்த சீசனில் தோனியின் ஆட்டம் மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. அவருடைய பேட்டிங்கை பார்த்துவிட்டு அவரிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான் தோனி நீங்கள் அதிகமாக பேட் செய்ய விரும்புகிறீர்களா?  என்று தான். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டம் அருமையாக இருக்கிறது. அவருடைய பங்களிப்பு அணிக்கு ரொம்பவே உதவுகிறது.

42 வயதில் ஒரு மனிதர் இப்படியெல்லாம் அதிரடியா விளையாட முடியுமா என்ற கேள்விக்கு என்னுடைய மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இளம் வீரர்கள் எல்லாம் தோனி கிட்ட இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இரவு நேரங்களில் தோனி இந்த மாதிரி விளையாடுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

மும்பை அணிக்கு எதிராக அவர் விளையாடிய விளையாட்டு மிகவும் நன்றாக இருந்தது. கடைசி ஓவரில் தான் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கொண்டு பந்தை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு 200 ரன்களுக்கு மேலே அணியை எடுத்துச்சென்றார். இன்னுமே சீக்கிரமாக அவர் களமிறங்கி இருந்தால் அந்த போட்டியில் சென்னை அணிக்கு இன்னுமே ரன்கள் சேர்ந்திருக்கும்.

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கடைசி நேரத்தில் வந்து சிக்ஸர்கள் விளாசுவது தான் விளையாட்டின் அற்புதமான பகுதி என்று நான் சொல்வேன். 42 வயதில் இவரை போல யாரவது விளையாடமுடியுமா என்று நான் யோசிக்கிறேன். தோனி இன்னும் ஓய்வு பெறாமல் எத்தனை ஆண்டுகள் விளையாட போகிறார் என்று தெரியவில்லை. அவர் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் வரை ரசிகர்களை இப்படி மகிழ்வித்து கொண்டே தான் இருப்பார்” எனவும் பிரையன் லாரா பாராட்டி பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

16 minutes ago

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…

31 minutes ago

எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது.!

சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…

53 minutes ago

800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசு விருது!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…

1 hour ago

மோர் களி ரெசிபி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி  செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்=…

1 hour ago

உடலில் ரத்த அளவை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்..!

உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…

2 hours ago