ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும்! முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணிப்பு!

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணியை குஜராத் வீழ்த்தும் என பிரையன் லாரா, அம்பதி ராயுடு  ஆகியோர் கூறியுள்ளனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் அருமையான பார்மில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றயை போட்டியிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க இருக்கிறது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றிபெறும் என முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு  தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரையன் லாரா  பேசியதாவது ” ராஜஸ்தான் அணி எனக்கு மிகவும் பிடித்த அணியாக மாறியிருக்கிறது. இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

அவர்கள் அணியில் இருக்கும் எல்லா கிரிக்கெட் வீரர்களும் மிகவும் சூப்பராக விளையாடுகிறார்கள். இதுவரை ஒரு போட்டியில் கூட அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. ஆனால், குஜராத் அணி அதனை மாற்றும் என்று நான் நினைக்கிறேன்” எனவும் பிரையன் லாரா கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பேசிய அம்பதி ராயுடு  ” என்னை பொறுத்தவரையில் குஜராத் டைட்டன்ஸ் மிகவும் சிறந்த அணி. பந்துவீச்சுலும் பேட்டிங்கிலும் அருமையாக இருக்கிறார்கள். ஒரு சில போட்டியில் அவர்கள் தோல்வியை கண்டாலும் அடுத்த சில போட்டிகளில் அவர்கள் சூப்பரான கம்பேக்கை கொடுப்பார்கள்.

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை ஆனால், இன்று நடைபெறும்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி  ராஜஸ்தான் அணியை வீழ்த்தும் என நினைக்கிறேன்” என்றும் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.

Recent Posts

ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…

35 minutes ago

“மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்”- தவெக தலைவர் விஜய் அறிக்கை!

சென்னை :  இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

35 minutes ago

காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…

55 minutes ago

வெறும் காகிதம் மாதிரி இருக்கு! பட்ஜெட் அறிவிப்பு…அண்ணாமலை விமர்சனம்!

சென்னை :  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…

1 hour ago

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…

3 hours ago

தமிழக பட்ஜெட் 2025 : மகளிர், மாணவர்கள், வேலைவாய்ப்பு.., மொத்த விவரம் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…

4 hours ago