#BreakingNews : ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியீடு ! முதல் போட்டியில் சென்னை – மும்பை மோதல்
ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் மற்றும் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். பின்னர் சில அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஸ்பாசராக ட்ரீம் லவன் மற்றும் CRED நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனமும் ஒப்பந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.@IPL @ChennaiIPL @mipaltan #IPLinUAE #ipl2020schedule #IPL2020 #IPL pic.twitter.com/SwUwvkz7yj
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 6, 2020