#BREAKING: இன்றைய ஐபிஎல் போட்டி நடக்குமா? – மேலும் ஒருவருக்கு கொரோனா!

டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இன்றை ஐபிஎல் போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதியுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, மகாராஷ்டிரா, புனே உள்ளிட்ட மூன்று நகரங்களில் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய 32வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டெல்லி அணியில் இரண்டு நிர்வாகிகள் உள்பட ஒரு வீரர் என மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டியிருந்தது. இன்றைக்கு பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. ரேபிட் பரிசோதனையில் தொற்று உறுதியான நிலையில், RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025