#BREAKING: ஐ.பி.எல் தொடரில் மேலும் இரண்டு புதிய அணிகள் – பிசிசிஐ

ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகளை சேர்க்க பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுகூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அமைப்பின் 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் டி-20 தொடரில் அடுத்த ஆண்டில் 2 புதிய அணிகளைச் சேர்ப்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனுக்குப் புதிய பதவி வழங்குவது, தேர்வுக் குழு தலைவர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) 89-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா (ரைஸிங் புனே சூப்பர் ஜெயிட்ன்ஸ்) குழுமம் ஆகிய இரு புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2 அணிகளும் அகமதாபாத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.