#BREAKING: இது எனது கடைசி ஐபிஎல் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த அம்பாதி ராயுடு!

Default Image

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அம்பாதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பாதி ராயுடு (வயது 36) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்பாதி ராயுடு, இது எனது கடைசி ஐபிஎல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. இந்த அற்புதமான பயணத்திற்காக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது மனப்பூர்வமாக நன்றியை சொல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான அம்பாதி ராயுடு, 2017 வரை விளையாடினார். பின்னர் 2018 மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸால் ரூ.6.75 கோடிக்கு அம்பாதி ராயுடுவை வாங்கியது. ஐபிஎல்லில் அவரது சாதனையைப் பொறுத்தவரை, ராயுடு பல ஆண்டுகளாக மிகவும் நிலையான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் லீக்கில் மொத்தம் 187 போட்டிகளில் விளையாடி 29.28 சராசரியில் 4187 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டும் கூட, சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் ராயுடுவும் ஒருவர் என்பது குறிப்பிடப்படுகிறது.

பிளேஆஃப் சுற்றில் இருந்து அந்த சென்னை அணி ஏற்கனவே வெளியேறினாலும், ராயுடுவின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போய்விட்டது. இந்த சீசனில் 12 போட்டிகளில் 27.10 சராசரியுடன் 271 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ராயுடு 27.16 சராசரியில் 2416 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணிக்காக ராயுடு 32.80 சராசரியில் 1771 ரன்கள் எடுத்துள்ளார். அவர் சென்னைக்காக 8 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பதிவை, திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அம்பதி ராயுடு நீக்கியது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தனது ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே, பதிவு செய்த ட்வீட்டை நீக்கியுள்ளார் அம்பாதி ராயுடு.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்