#Breaking: கோலாகலமாக தொடங்கும் ஐபிஎல் தொடர்., ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் முதல் போட்டி.!
ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021-ஆம் ஆண்டிற்கான 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் போட்டி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிளேஆஃப் சுற்றுகளும், மே 30-ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறயுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது சொந்த ஸ்டேடியத்தில் விளையாடாமல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைத்தனத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
???? BCCI announces schedule for VIVO IPL 2021 ????
The season will kickstart on 9th April in Chennai and the final will take place on May 30th at the Narendra Modi Stadium, Ahmedabad.
More details here – https://t.co/yKxJujGGcD #VIVOIPL pic.twitter.com/qfaKS6prAJ
— IndianPremierLeague (@IPL) March 7, 2021
#IPL2021 schedule is here!
– Starts on April 9th
– 6 stadiums, will be done in rotations of 2 + 2 + 2
– Playoffs at Ahmedabad
– Matches start at 3.30 and 7.30 ISTWe begin with #MI vs #RCB at Chennai ???? pic.twitter.com/N9maB85x0O
— Siddarth Srinivas (@sidhuwrites) March 7, 2021