#Breaking:டி-20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு;இந்தியா,பாகிஸ்தான் மோதல் – தேதி அறிவிப்பு..!
டி-20 உலகக் கோப்பை போட்டியில் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா,பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக் கோப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதன்படி,அக்டோபர் 17 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது.
இதனையடுத்து,டி-20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது.இதில்,2-வது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,டி-20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.அதன்படி,துபாயில் அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா,பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மோதவுள்ளன.
ICC T20 World Cup: India to play Pakistan in Dubai on October 24. pic.twitter.com/PBgwQ0APBq
— ANI (@ANI) August 17, 2021
Mark your calendars ????
Get ready for the 2021 ICC Men’s #T20WorldCup bonanza ????
— ICC (@ICC) August 17, 2021
இதனையடுத்து,அக்டோபர் 31 ஆம் தேதி துபாயில் இந்திய அணி,நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.துபாயிலும், அபுதாபியிலும் இந்தியா மொத்தம் 4 போட்டிகளில் விளையாடுகிறது.
- இந்தியா vs நியூசிலாந்து – அக்டோபர் 31 – உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி – துபாய்.
- இந்தியா vs ஆப்கானிஸ்தான் – நவம்பர் 3 – மாலை 6 மணி – அபுதாபி.
- இந்தியா vs பி 1 (தகுதி) – நவம்பர் 5 – மாலை 6 மணி -துபாய்
- இந்தியா vs ஏ 2 (தகுதி) – நவம்பர் 8 – மாலை 6 மணி -துபாய் .
குரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர்.
குரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.
2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி நிலவரப்படி அணி தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு இடங்களுக்கு தகுதி சுற்று நடைபெற உள்ளது.
இந்த தகுதி சுற்றில் வங்கதேசம், நமீபியா, ஓமன் மற்றும் பப்புவா நியூகினியா,இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.